2010-08-09 15:01:00

பங்களாதேஷில் அகில உலகப் பழங்குடியினர் நாள் கொண்டாடப்பட்டது


ஆகஸ்ட் 09, 2010 பங்களாதேஷில் உள்ள இளையோர், விளையாட்டுப் போட்டிகள் மூலம் பழங்குடி மக்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இத்திங்களன்று கொண்டாடப்படும் அகில உலகப் பழங்குடியினர் நாளையொட்டி, கடந்த வெள்ளிக் கிழமை முதல் அந்நாட்டில் உள்ள இளையோர் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் மூலம் தங்கள் ஆர்வத்தைக் காட்டி வருகின்றனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

பங்களாதேஷின் டாக்கா பல்கலை கழகத்தில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் கிறிஸ்தவர், புத்தர் என்று அனைத்து மதத்தவரும் கூடி 2500 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பங்களாதேஷில் 45 பழங்குடியினர் குழுக்கள் உள்ளதெனவும், அங்குள்ள 30 லட்சம் பழங்குடியினரில் 2,50,000 பேர் கிறிஸ்தவர்கள் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஐக்கிய நாட்டு போது அவை ஆகஸ்ட் மாதம் 9ம் தேதியை அகில உலக பழங்குடியினர் நாள் என 1994ம் ஆண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.