2010-08-09 15:57:23

ஆகஸ்ட் 10 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


258 - புனித இலாரன்ஸ் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்.

610 - முகம்மது நபி குர்ஆனைப் பெறத் தொடங்கினார்.

1675 - இலண்டனில் ராயல் கிரீன்விச் வானியல் ஆய்வகத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

1741 - திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர், டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியுடனான போரில் டச்சுத் தளபதி இயுஸ்ட்டாச்சியஸ் டி லனோய் என்பவனைச் சிறைப்பிடித்தார்.

1894 - நான்காவது இந்தியக் குடியரசுத் தலைவர் வி. வி. கிரி பிறந்தார்

1948 - ஜவஹர்லால் நேரு இந்திய அணுசக்திக் கமிஷனைத் (Atomic Energy Commission) துவக்கி வைத்தார்.

1990 - மகெலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது.

2000 - உலக மக்கள் தொகை ஆறு பில்லியனைத் தாண்டியது

2003 - யூரி மலென்சென்கோ விண்வெளியில் திருமணம் புரிந்த முதலாவது மனிதராவார்.

2006 - திரிகோணமலையில் சேருவிலப் பகுதியில் தொடர்ச்சியான குண்டுவீச்சினால் ஐம்பது பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.








All the contents on this site are copyrighted ©.