2010-08-09 15:01:17

10 உதவியாளர்கள் கொலைச் செய்யப்பட்டுள்ள போதிலும் அந்நாட்டில் பணியைத்தொடர உள்ளதாக அறிவித்துள்ளது ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் கிறிஸ்தவ மருத்துவ உதவிக் குழு ஒன்று.


ஆகஸ்ட் 09, 2010. ஆப்கானிஸ்தானில் பணியாற்றிக்கொண்டிருந்த 10 உதவியாளர்கள் தாலிபான் குழுவால் கொலை செய்யப்பட்டுள்ள போதிலும் அந்நாட்டில் தங்கள் பணிகளைக் கைவிட்டு வெளியேறப்போவதில்லை என அறிவித்துள்ளது கிறிஸ்தவ மருத்துவ உதவிக் குழு ஒன்று.

1966ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் உழைத்துவரும் International Assistance Mission என்ற கிறிஸ்தவ அமைப்பு தன் பணியாளர்களுள் 6 அமெரிக்கர்கள், இரு ஆப்கானியர்கள், ஒரு ஜெர்மானியர், ஒரு பிரிட்டானியர் என பத்து பேரை தாலிபான் தாக்குதலில் கடந்த வாரம் இழந்துள்ள போதிலும் அந்நாட்டிற்கானப் பணிகளை நிறுத்தும் எண்ணம் இல்லை என்றார் அவ்வமைப்பின் உயர் இயக்குனர் Dirk Frans.








All the contents on this site are copyrighted ©.