2010-08-07 15:33:26

ஒரே பாலினத் திருமணச் சட்டம் குறித்த நீதிமன்றத் தீர்ப்புக்கு மெக்சிகோ திருச்சபை கண்டனம்


ஆக.07,2010. ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்கும் மெக்சிகோ மாநகராட்சியின் சட்டத்திற்கு மெக்சிகோ உச்சநீதிமன்றம் ஆதரவு அளித்திருப்பது குறித்தத் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது அந்நாட்டுத் திருச்சபை.

உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு குறித்து மெக்சிகோ நகர் உயர்மறைமாவட்டம் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் இது குறித்து கர்தினால் Norberto Rivera Carrera இஞ்ஞாயிறு மறையுரையில் கருத்து தெரிவிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

மெக்சிகோ உச்சநீதிமன்றம், வருகிற திங்களன்று, ஒரே பாலினத் திருமணத் தம்பதியர் குழந்தைகளைத் தத்து எடுப்பது உட்பட இது குறித்த சில விவகாரங்களை விவாதிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மெக்சிகோ நகர நிர்வாகம், 320 ஒரே பாலினத் தம்பதியரின் திருமணங்களை அங்கீகரித்திருப்பதாக இவ்வாரத்தில் அறிவித்திருக்கிறது.







All the contents on this site are copyrighted ©.