2010-08-06 16:16:11

இலங்கை- தமிழ் மக்கள் காவல்துறையினர் மீது கொண்டுள்ள பயத்தை அகற்றுவதற்கு காரித்தாஸ் உதவி


ஆக.06,2010. மேலும், இலங்கையில் பெரும்பான்மையாக இருக்கும் சிங்கள காவல்துறையினர் குறித்து தமிழ் மக்களின் மனதில் ஆழமாகப் புரையோடிப்போயுள்ள அவநம்பிக்கை நீங்குவதற்கு அந்நாட்டு கத்தோலிக்கக் காரித்தாஸ் நிறுவனம் முயற்சித்து வருகிறது.

இலங்கையில் பல ஆண்டுகளாக இடம் பெற்ற போருக்குப் பின்னர் காவல்துறையினரை நெருங்கவோ, காவல்நிலையத்துக்குச் செல்லவோ மக்கள் மிகவும் பயப்படுகிறார்கள் என்று திரிகோணமலை-மட்டக்களப்பு காரித்தாஸ் இயக்குனர் அருள்திரு ஸ்ரீதரன் சில்வெஸ்டர் கூறினார்.

காவல்துறையினர் தங்களுக்கு உதவி செய்வார்கள் என்றும் அவர்களிடம் எந்தப் புகாரைக் கொடுப்பதற்கோ அல்லது உதவியைக் கேட்பதற்கோ மக்கள் பயப்படத் தேவையில்லை என்றும் இதற்கான உதவிகளைக் காரித்தாஸ் செய்து வருகின்றதென்றும் அக்குரு உரைத்தார்.

அதேசமயம், காவல்துறையினரும் தமிழ் மக்களிடம் நட்புடன் பழகி அவர்களுக்கு உதவுவதற்குத் தயாராக இருக்க வேண்டுமென்று கூறிய குரு சில்வெஸ்டர், பல காவல்துறையினருக்குத் தமிழ் பேசக்கூடத் தெரியாது என்றார்.

இதற்கிடையே, முருகண்டி நகர் 2011க்குள் 75,000 சிங்களவர்கள் வாழ்கின்ற ஒரு சிங்கள நகரமாக காட்சிதரப்போகின்றது என்று ஓர் ஊடகச் செய்தி கூறுகிறது







All the contents on this site are copyrighted ©.