2010-08-05 14:26:06

ஆகஸ்ட் 06 நாளும் ஒரு நல்லெண்ணம்


ஒரு சமயம் செல்வந்தர் ஒருவர் விலையுயர்ந்த காரில் பயணம் சென்று கொண்டிருந்தார். திடீரென அந்தக் கார் நின்று விட்டது. அதைச் சரிசெய்வதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் இயலவில்லை. அருகிலிருந்த தொழிற்பட்டறையோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சிறிது நேரத்தில் பணியாளும் வந்தான். இருநூறு ரூபாய் தருவதாய் இருந்தால் உடனே பழுது பார்க்கிறேன் என்றான் பணியாள். அவரும் அதற்கு இணங்கினார். அந்தப் பணியாள் அந்தக் காரின் ஓரிடத்தில் இலேசாகத் தட்டினான். உடனே கார் இயங்கத் தொடங்கியது. அப்பொழுது அநதப் பணக்காரர் அவனிடம், தம்பி, இந்த வேலைக்கா இருநூறு ரூபாய்? என்று கேட்டார். ஐயா, இந்த வேலைக்குக் கூலி ஒரு ரூபாய்தான். ஆனால் எந்த இடத்தில் தட்ட வேண்டும் என்பதைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் மீதி 199 ரூபாய் என்றான்.

எதை, எங்கு, எப்படி, எதற்காக என்பதைப் புரிந்து கொள்பவர்களால்தான் பெரிய சிக்கல்களையும் எளிதில் தீர்த்து வைக்க முடியும். எல்லா மொழிகளிலும் மிகவும் துன்பமான சொற்கள் என்னால் முடியாது என்பவையே







All the contents on this site are copyrighted ©.