2010-08-04 16:16:24

வறுமையை ஒழிப்பதற்கான ஐ.நா. கையெழுத்து மனுவில் இதுவரை 2,50,000 க்கு அதிகமானோர் கையெழுத்துப் போட்டுள்ளனர்


ஆக.04,2010. நாடுகளில் வறுமையை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சேகரிக்கப்பட்டு வரும் கையெழுத்து மனுவில் இதுவரை 2,50,000 க்கு அதிகமானோர் கையெழுத்துப் போட்டிருப்பதாக ஐ.நா.வின் வேளாண்மை நிறுவனம் அறிவித்தது.

வருகிற நவம்பருக்குள் பத்து இலட்சம் கையெழுத்துக்களைச் சேகரிக்க வேண்டுமென்ற ஐ.நா.வின் திட்டம் நிறைவேறும் என்று நம்புவதாகத் தெரிவித்த FAO இயக்குனர் Jacques Diouf, ஏழைகளுடன் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் விதமாக இந்த மனுவில் கையெழுத்திடுமாறு ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

1996ம் ஆண்டின் உலக உணவு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட 185 நாடுகள், 2015க்குள் உலகில் பசித்திருப்போரின் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பதற்குத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றின. தற்போது உலகில் பசித்திருப்போரின் எண்ணிக்கை 42 கோடிக்கு அதிகமாகும்.

இந்தக் கையெழுத்தை இணையதளத்தின் வழியாகவும் போடலாம். அந்த முகவரி - http://www.1billionhungry.org







All the contents on this site are copyrighted ©.