2010-08-04 16:13:33

பாகிஸ்தானில் “பசுமை” அன்னைமரியா திருப்பயணம்


ஆக.04,2010. பாகிஸ்தான் தலத்திருச்சபை இவ்வாண்டில் “பசுமை” அன்னைமரியா தேசிய திருப்பயணத்தை நடத்தத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளது.

வருகிற செப்டம்பர் 3 முதல் 5 வரை Mariamabad கிறிஸ்தவக் கிராமத்திற்குத் திருப்பயணம் செல்லும் ஆயிரக்கணக்கானப் பக்தர்களுக்கு மூவாயிரம் மரக்கன்றுகளைக் கொடுத்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவிருப்பதாகப் பாகிஸ்தான் திருச்சபை அதிகாரிகள் அறிவித்தனர்.

“மரியாவும் இப்பூமியும் நமது அன்னையர்” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கின்ற இந்தத் தேசியத் திருப்பயணத்தின் போது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது சமயம் சார்ந்த கடமை என்பதையும் விசுவாசிகளுக்கு வலியுறுத்தவிருப்பதாக லாகூர் பேராயர் இலாரன்ஸ் சல்தான்ஹா கூறினார்.

மேலும், பாகிஸ்தானில் வெள்ளத்தால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள 2,500 குடும்பங்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைச் செய்வதற்கு பாகிஸ்தான் காரித்தாஸ் தீர்மானித்திருப்பதாக அதன் செயலர் அனிலா ஜாக்குலின் ஜில் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.