2010-08-04 16:12:35

அன்னைதெரேசா பிறந்ததன் நூறாம் ஆண்டு நிறைவு நாளன்று நயாகரா அமைதிப் பாலம் நீல மற்றும் வெண்மை நிற ஒளியால் ஒளிர்ந்து கொண்டிருக்கும்


ஆக.04,2010. முத்திப்பேறு பெற்ற அன்னைதெரேசாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் பிறந்ததன் நூறாம் ஆண்டு நிறைவு நாளான இந்த ஆகஸ்ட் 26ம் தேதி நயாகரா ஆற்றின் மீதுள்ள அமைதிப் பாலம் நீலம் மற்றும் வெண்மை நிற ஒளியால் ஒளிர்ந்து கொண்டிருக்கும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் ஒருவர் அறிவித்தார்.

அன்னை தெரேசா தொடங்கிய பிறரன்பு மறைபோதக சபை அருட்சகோதரிகள் உடுத்தும் சேலையின் நிறங்களில் இப்பாலம் அந்நாளில் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு Buffalo ஆயர் Edward Kmiec, கனடா நாட்டு புனித Catharines மறைமாவட்ட நிர்வாகி பேரருட்திரு Wayne Kirkpatrick ஆகிய இருவரும் சேர்ந்து இந்த அமைதிப்பால நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டதன் பேரில் இம்மாதம் 26ம் தேதி அப்பாலம், நீலம் மற்றும் வெண்மை நிற ஒளியால் அழகுறக் காட்சியளிக்கவிருக்கின்றது.








All the contents on this site are copyrighted ©.