2010-08-03 16:00:16

யுனெஸ்கோ பட்டியலில் இலங்கை மலைநாடு




ஆக.03,2010 இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதி, இந்தியாவின் ஜெய்ப்பூரில் உள்ள ஜந்தர் மந்தர் வானவியல் சாஸ்திர ஆய்வு மையம் உட்பட 21 புதிய இடங்கள் யுனெஸ்கோவின் உலக கலாச்சார மற்றும் பாரம்பரியமிக்கப் பகுதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

வேகமாக அழிவடைந்த உயிரினமாக கருதப்பட்ட ஸ்லென்டர் லோரிஸ் என்ற அரிய வகை தேவாங்கினம், ஊதா நிற முகத்தோற்றத்தைக் கொண்ட குரங்கினம், இலங்கைச் சிறுத்தைப்புலி மற்றும் அரிதான பறவையினங்கள், தாவர இனங்கள் போன்ற பல வகையான உயிரினங்களுக்கும் வாழ்விடமாக விளங்குவதால் இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதி, உயிரினப் பல்வகைத் தன்மைக்கு உகந்த இடமாக யுனஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர் ஜந்தர் மந்தர் வானவியல் சாஸ்திர ஆய்வு மையம், 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இரண்டாம் ஜெய்சிங் ஜெய்ப்பூர் மகாராஜாவால் உருவாக்கப்பட்டது.

இதுதவிர அமெரிக்கா, டாஸ்மானியா, சவுதி அரேபியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலுள்ள சில முக்கிய தலங்களையும் உலகக் கலாச்சார மற்றும் பாரம்பரிய சிறப்பம்சங்கள் கொண்ட பகுதிகளாக அறிவித்துள்ளது யுனேஸ்கோ.

உலகின் சிறப்பு இடங்களாகக் குறிக்கப்பட்டுள்ள 850க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தப் புதிய இடங்களும் இணைகின்றன.








All the contents on this site are copyrighted ©.