2010-08-03 15:56:47

இஸ்ரேல் நாடு சர்வதேச விதிமுறைகளை மதிக்க வேண்டுமென ஐந்து கிறிஸ்தவ அமைப்புகள் மனு சமர்ப்பித்துள்ளன


ஆக.03, 2010 இஸ்ரேல் நாடு சர்வதேச விதிமுறைகளை மதிக்காமல், தன்னிச்சையாக நடந்து கொள்ளும் போக்கு நிறுத்தப்பட வேண்டுமென ஐந்து கிறிஸ்தவ அமைப்புகள் பிரெஞ்சு பிரதமர் Francois Fillon இடம் மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளன.

Caritas France, CIMADE ஆகிய நிறுவனங்களுடன் இன்னும் சில நிறுவனங்களும் இணைந்து அளித்த இந்த மனுவில், சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்றுவதே நாடுகளுக்கிடையே உருவாகக் கூடிய நல்லுறவுக்கு தகுந்த வழி என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இஸ்ரேல் நாடு, அக்ரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நுழையும் எவரையும் சந்தேகத்துடன் நடத்துவதால், அந்தப் பகுதியில் பாலஸ்தீனியர்களின் வாழ்க்கை பெரிதும் ஒடுக்கப்பட்டுள்ளதென கூறும் இவ்வமைப்புகள், சர்வதேச விதி முறைகளை இஸ்ரேல் மதிக்காத போது, ஐரோப்பிய ஒன்றியம் அதனுடன் கொண்டிருக்கும் உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளன







All the contents on this site are copyrighted ©.