2010-08-02 15:39:29

மக்கள் தங்களது செல்வங்களையும் வாழ்வையும் இலங்கையின் வட பகுதி மற்றும் கிழக்குப் பகுதி மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் - Chilaw மறைமாவட்ட ஆயர்


ஆக.02, 2010 மக்கள் தங்களது செல்வங்களையும் வாழ்வையும் இலங்கையின் வட பகுதி மற்றும் கிழக்குப் பகுதி மக்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார் Chilaw மறைமாவட்ட ஆயர் Valence Mendis.

Talawilaவில் உள்ள புனித அன்னாள் திருத்தலத்தின் சிறப்பு விழாவை இந்த ஞாயிறன்று கொண்டாடிய வேளை, அங்கு திருப்பலியும் மறையுரையும் வழங்கிய ஆயர் Mendis திருத்தலத்திற்கு வந்திருந்த மக்களுக்கு இந்த அழைப்பை விடுத்தார்.

இந்த உலக வாழ்க்கை நாம் யாருமே கேட்காத போது இறைவன் நம் அனைவருக்கும் அளித்துள்ள ஒரு கோடை எனவே, இந்தக் கொடையைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளவே நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று ஆயர் Mendis கூறினார்.

Talawilaவில் உள்ள புனித அன்னாள் திருத்தலம் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் உரிமையான ஒரு திருத்தலம் எனவே புனித அன்னாளின் பரிந்துரையால் இந்த நாட்டை நாம் அனைவரும் கட்டியெழுப்பும் முயற்சியை இறைவன் ஆசீர்வதிக்க வேண்டுவோம் என்றும் ஆயர் கூறினார்.

ஆயர் Valence Mendis உடன் திரிகோணமலை-பட்டிகோலா ஆயர் Kingsley Swampillaiம் இத்திருவிழாவின் கூட்டுத் திருப்பலியில் கலந்து கொண்டு, தமிழில் மறையுரையாற்றினார்.

Talawila திருத்தலத்தின் 250ம் ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் 2011 ஆண்டு துவங்கி, அதற்கு அடுத்த 2012 ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் என்று அத்திருத்தலத்தின் அதிபர் அருள்தந்தை லூக் நெல்சன் கூடியிருந்த மக்களுக்கு அறிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.