2010-08-02 15:32:37

இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுகளுக்கென பல கோடி ரூபாயை செலவழிப்பது குறித்த ஒழுக்க ரீதி பிரச்னையை எழுப்பியுள்ளன அந்நாட்டின் இரு கிறிஸ்தவக் குழுக்கள்.


ஆகஸ்ட் 02, 2010. இந்தியாவில் பல லட்சக்கணக்கானோர் பசியாலும் வீடு மற்றும் வேலையின்மையாலும் வாடும்போது, காமன்வெல்த் விளையாட்டுகளுக்கென பல கோடி ரூபாயைச் செலவழிப்பது குறித்த ஒழுக்க ரீதி பிரச்னையை எழுப்பியுள்ளன அந்நாட்டின் இரு கிறிஸ்தவக் குழுக்கள்.

ஏறத்தாழ 40 கோடி மக்கள் ஒரு நாளைக்கு ஒரு டாலருக்குக் குறைவாகச் சம்பாதிக்கும் நாட்டில் விளையாட்டுப் போட்டிகளுக்கென இவ்வளவுப் பெரியத்தொகை செலவழிக்கப்படுவதை ஒழுக்கரீதி முறையில் நியாயப்படுத்தமுடியுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளன நேர்மையான நடவடிக்கைகளுக்கும் எழ்மை ஒழிப்புக்கும் என உழைக்கும் இரு கிறிஸ்தவக் குழுக்கள்.

காமன்வெல்த் விளையாட்டுகளுக்கென 700 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது தற்போது 12,000 கோடியாக உயர்ந்துள்ளதாகச் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.