2010-07-31 14:30:05

வடஅயர்லாந்து : 1971ம் ஆண்டு இடம் பெற்ற கொலைகள் குறித்து சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட பெல்ஃபாஸ்ட் கத்தோலிக்க ஆயர் அழைப்பு


ஜூலை31,2010: 1971ம் ஆண்டு ஆகஸ்டில் வட அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட்டில், பிரிட்டன் படைவீரர்கள் 11 கத்தோலிக்கர்களைக் கொலை செய்தது குறித்து சர்வதேச விசாரணைகள் நடத்தப்படுமாறு பெல்ஃபாஸ்ட் கத்தோலிக்க ஆயர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதில் கொல்லப்பட்டவர்களில் எட்டுக் குழந்தைகளின் தாயும், இறந்து கொண்டிருந்த ஒருவருக்கு உதவி செய்து கொண்டிருந்த போது சுடப்பட்டு இறந்த அருள்திரு ஹூயூக் முல்லனும் அடங்குவர்.

இந்த பெல்ஃபாஸ்ட் துப்பாக்கிச்சூட்டை நடத்திய பிரிட்டன் படைவீரர்களில் பலர், அதற்கு அடுத்த ஆறு மாதங்களில் 13 அப்பாவி பொது மக்கள் கொலைச் சம்பவத்திலும் ஈடுபட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. கத்தோலிக்கத் திருச்சபையின் ஆவணங்களில் பதிவுபண்ணப்பட்டுள்ள இந்தச் சம்பவங்கள் ஏறத்தாழ 40 ஆண்டுகளாக மறக்கப்பட்டுள்ள நிலையில் இவை குறித்த சர்வதேச விசாரணைகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் ஆயர் நோயெல் ட்ரேனார்.








All the contents on this site are copyrighted ©.