2010-07-31 14:34:34

கத்தோலிக்க அரசுசாரா நிறுவனம் ஒன்று தமிழகத்தில் பாலர் தொழில்முறையை அகற்றுவதற்கு உழைத்து வருகிறது


ஜூலை31,2010: கத்தோலிக்க அரசுசாரா நிறுவனம் ஒன்று சிறாருக்கும் தாய்மார்க்கும் கல்வி வழங்குவதன் மூலம் தமிழகத்தில் பாலர் தொழில்முறையை அகற்றுவதற்கு உழைத்து வருகிறது.

இந்தியாவின் நான்கு மாநிலங்களில் 1984ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் Hand in hand என்ற அரசுசாரா அமைப்பு, தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலர் தொழில்முறையை அகற்றுவதற்கு உழைத்து வருகிறது.

இந்தியாவில் 42 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். 14 வயதுக்குட்பட்ட சிறார் வேலைக்கு அமர்த்தப்படுவது தடை செய்யப்பட்டிருக்கின்ற போதிலும் ஒரு கோடியே 20 இலட்சம் சிறார் இன்னும் வேலை செய்கின்றனர் என்று அரசு அறிவித்துள்ளது.

எனினும், இவ்வெண்ணிக்கை 8 கோடியே 50 இலட்சம் முதல் பத்து கோடி வரை இருக்கலாம் என்று ஐ.நா. கணித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.