2010-07-29 15:08:32

தொழிலாளிகளின் ஆன்மீகப் பணிகள் குறித்த விவாதங்களில் லத்தீன் அமெரிக்க ஆயர்கள் ஈடுபட்டுள்ளனர்


ஜூலை 29, 2010 லத்தீன் அமெரிக்காவில் உள்ள தொழிலாளிகளின் ஆன்மீகப் பணிகளில் இன்னும் எவ்விதம் அதிகம் கவனம் செலுத்துவது என்ற விவாதங்களில் ஈடுபட்டுள்ளனர் லத்தீன் அமெரிக்க ஆயர்கள்.
"உலகமயமாக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தில் தொழிலாளர்களுக்கான ஆன்மீகப் பணிகள்" என்ற தலைப்புடன் இந்த திங்கள் முதல், வெள்ளி வரை சிலே நாட்டின் Santiago நகரில் நடைபெற்று வரும் கருத்தரங்கில் தொழிலாளர் நலன் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
லத்தீன் அமெரிக்க ஆயர் அவையின் நீதி மற்றும் ஒருமைப்பாடு ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கருத்தரங்கில் லத்தீன் அமேரிக்கா, கரிபியன் பகுதிகளிலிருந்து 14 நாடுகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.பொது நிலையினரைக் கட்டியெழுப்பும் சங்கம் என்ற அமைப்பின் பொறுப்பாளராக இருக்கும் வெனிசுவேலா ஆயர் Jose Luis Azuaje கருத்தரங்கில் பேசுகையில், தொழிலாளர் உலகம் பொருளாதாரம், அரசியல், வர்த்தகம், கலாச்சாரம் என்று பல உலகங்களும் சங்கமிக்கும் ஒரு இடம் என்றும், இவைகளிலிருந்து வரும் சவால்களை விட, தொழிலாளர் குடும்பங்களிலிருந்து வரும் சவால்களே மிக ஆழமானவை என்றும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.