2010-07-29 15:09:11

இலங்கையில் நிரந்தர சமாதானம் நிலவ கலாச்சாரங்களுக்கு மத்தியில் உரையாடல்கள் நடைபெற வேண்டும்


ஜூலை 29, 2010 இலங்கையில் நிரந்தர சமாதானம் நிலவ அங்குள்ள பல்வேறு கலாச்சாரங்களுக்கு மத்தியில் உரையாடல்கள் நடைபெற வேண்டும் என்று கத்தோலிக்கர்களும், பிற கிறிஸ்தவர்களும் கூறியுள்ளனர்.
1983ம் ஆண்டு ஜூலை மாதம் சிங்கள மக்கள் தமிழர்களுக்கு எதிராக ஆரம்பித்த தாக்குதல்களால் கடந்த 26 ஆண்டுகள் அங்கு நிகழ்ந்த உள்நாட்டு போரின் விளைவுகளைக் “கருப்பு ஜூலை மாதம்” என்று நினைவுகூர்ந்த கத்தோலிக்கரும், கிறிஸ்துவர்களும் அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் இவ்வாறு பேசினர்.
நாட்டில் பெரும்பான்மை அளவுள்ள சிங்களவர்கள் மற்றொரு பெரும்பான்மைக் குழுவான தமிழர்களுடன் உரையாடல்களையும், ஒப்புரவு முயற்சிகளையும் மேற்கொள்ள இக்கூட்டத்தில் பல்வேறு பரிந்துரைகள் கூறப்பட்டன.
தமிழர்களின் பிரச்சனைகளைச் சிங்களவர்கள் சரிவரப் புரிந்து கொள்வதில்லை, எனவே உரையாடல்கள் அவசியமாகின்றன என்று கிறிஸ்துவ ஒருமைப்பாடு இயக்கத்தின் சார்பில், இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த அருள்தந்தை Sherard Jayawardane கூறினார்.இலங்கையின் பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வுகள் காண்பது ஒருபுறம் நடக்கும் போது, அடிப்படை குழுக்கள் மத்தியில் இது போன்ற உரையாடல் முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டுமென இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறினர்.







All the contents on this site are copyrighted ©.