2010-07-28 17:01:31

பிலிப்பின்சின் புதிய அரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு வழங்கிய உரையைக் குறித்துத் அந்நாட்டு ஆயர்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்


ஜூலை 28, 2010 பிலிப்பின்சின் புதிய அரசுத் தலைவர் Benigno Aquino தன் நாட்டு மக்களுக்கு அண்மையில் வழங்கிய உரையைக் குறித்துத் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
அரசுத் தலைவர் வழங்கிய உரையில் முந்தைய அரசின் குறைகளை எடுத்துக் கூறியதோடு மட்டுமல்லாமல், கடவுளின் அருளால் அக்குறைகளைத் தன் அரசு மீண்டும் செய்யாது என்றும் கூறினார்.
அரசுத் தலைவரின் உரை எதார்த்தமாக இருந்ததெனவும், உண்மை, நீதி, சமாதானம் இவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்ததெனவும் Lingayen-Dagupan உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர் Oscar Cruz கூறினார்.
ஏழைகள் அதிகமாய் வாழும் பகுதிகள் பலவற்றை உள்ளடக்கிய Isabela de Basilan மறைமாவட்டத்தின் ஆயர் Martin Jumoad அரசுத் தலைவரின் பேச்சு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்ததென்றும் சிறப்பாக, Aquino கூறிய அரசு நலத் திட்டங்கள் மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் கூறினார்.பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் சமூகப் பணி ஆணையத்தின் பொறுப்பாளரான துணை ஆயர் Broderick Pabillo, அரசுத் தலைவரின் இந்த உரை நாட்டை முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் செல்ல ஒரு ஆரம்பமாக அமையும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார்.







All the contents on this site are copyrighted ©.