2010-07-28 16:57:47

ஜூலை 29 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1883 ல் இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியும்,

1904 ல் இந்தியத் தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாட்டாவும் பிறந்தனர்

1944 – இலங்கை அறிவியல் முன்னேற்றச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

1948 – இரண்டாம் உலகப் போர் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மீண்டும் இலண்டனில் ஆரம்பமாகின.

1957 – சர்வதேச அணுசக்தி நிறுவனம் உருவாக்கப்பட்டது.

1981 – வேல்ஸ் இளவரசர் சார்லஸ் – டயானா திருமணம் நடைபெற்றது.

1987 – இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக இலங்கை – இந்திய ஒப்பந்தம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் கொழும்பில் கையெழுத்தானது.

1987 – இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்பில் இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பின் போது இலங்கை இராணுவத்தினன் ஒருவனால் துப்பாக்கியால் தலையில் குத்தப்பட்டு காயம் அடைந்தார்.

2005 – ஏரிஸ் குறுங்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.