2010-07-28 17:01:12

கனடா Anglican கத்தோலிக்கத் திருச்சபை உரோமைக் கத்தோலிக்கத் திருச்சபையில் இணைவதற்கு முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது


ஜூலை 28, 2010 கனடாவில் அண்மையில் நடந்து முடிந்த கூட்டத்தில், Anglican கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர்கள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வகுத்துள்ள அப்போஸ்தலிக்க விதிமுறைகளின்படி, உரோமைக் கத்தோலிக்கத் திருச்சபையில் இணைவதற்கு முழு ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.
பன்னிரு குழுக்களைக் கொண்ட கனடா Anglican கத்தோலிக்கத் திருச்சபை Surrey, British Colombia ஆகிய இடங்களில் நடத்திய இருவேறு கூட்டங்களில் இத்தகைய ஆதரவுக்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.நான்கு ஆயர்கள், இன்னும் பல குருக்கள் மற்றும் பொதுநிலையினர் கலந்து கொண்ட இந்தக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கனடா Anglican கத்தோலிக்கத் திருச்சபை, உரோமையக் கத்தோலிக்கத் திருச்சபையுடன் இணைவதற்கான அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றது என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.