2010-07-27 15:02:21

வெனெசுவேலா மற்றும் கொலம்பியாவில் அமைதி ஏற்படுவதற்கு கத்தோலிக்கத் திருச்சபை வலியுறுத்தல்


ஜூலை27,2010 வெனெசுவேலா அரசுத்தலைவர் ஹூகோ சாவேஸ் கொலம்பிய நாட்டுடனான அரசியல் உறவை முறித்துக் கொள்வதற்குக் கடந்த வாரத்தில் எடுத்த தீர்மானத்தையடுத்து இவ்விரு நாடுகளுக்கிடையே பதட்டநிலைகள் உருவாகியுள்ளவேளை இவ்விரு நாடுகளுக்கிடையே அமைதி ஏற்படுவதற்கு கத்தோலிக்கத் திருச்சபை வலியுறுத்தி வருகிறது.

வெனெசுவேலா மற்றும் கொலம்பிய நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பும் ஒற்றுமையும் வளர்வதற்குத் தாங்கள் உறுதியுடன் செயல்படவிருப்பதாக இவ்விரு நாடுகளின் ஆயர்கள் அறிவித்தனர்.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட வெனெசுவேலா ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Ubaldo Santana Sequera, இந்த நிலைமை கவலை தருவதாகவும், இவ்விரு நாடுகளுக்கிடையே எந்தவித இராணுவ மோதல்களும் தவிர்க்கப்படும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

இது குறித்துப் பேசிய கொலம்பிய ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Ruben Salazar Gomez ம், இவ்விரு நாடுகளும் அமைதி மற்றும் சகோதரத்துவ உறவுகளை ஏற்படுத்தும் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.