2010-07-26 15:42:43

ஹெயிட்டி நாட்டிற்கான இரண்டாம் கட்ட உதவிகளுக்கானத் திட்டங்களை அறிவித்துள்ளது லத்தீன் அமெரிக்கத் திருச்சபை


ஜூலை 26, 2010 இவ்வாண்டுத் துவக்கத்தில் ஹெயிட்டியில் இடம்பெற்ற நில அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்கிய லத்தீன் அமெரிக்கத் திருச்சபை தற்போது அந்நாட்டு மக்களுக்கான இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து வருவதாக தென் அமெரிக்க ஆயர் பேரவை அறிவித்தது.
கொலம்பியாவின் பொகோட்டோவில் கூடிய லத்தீன் அமெரிக்க ஆயர் பேரவையின் அதிகாரிகள், ஹெயிட்டி திருச்சபையுடனான நெருக்கத்துடனும் அந்நாட்டு மக்களுடனான ஒருமைப்பாட்டுணர்வுடனும் மேலும் உதவிகளை ஆற்ற உள்ளதாகத் தெரிவித்தனர்.ஹையிட்டி நாட்டுடனான தகவல் பரிமாற்றத்தையும் அந்நாட்டிற்கான மனிதாபிமான உதவிகளையும் அதிகரித்தல், குருக்கள், குருமடமாணவர்கள் மற்றும் பொதுநிலையினருக்கான பயிற்சிக்கு வாய்ப்பளித்தல், குருத்துவப் படிப்பிற்கானக் கல்வி உதவித்தொகை வழங்குதல், குருமடங்கள்,கோவில்கள், நலமையங்கள், பயிற்சி முகாம்கள் போன்றவை கட்ட நிதியுதவி அளித்தல் என தன் இரண்டாம் கட்ட உதவிகளுக்கானத் திட்டங்களை அறிவித்துள்ளது லத்தீன் அமெரிக்கத் திருச்சபை.







All the contents on this site are copyrighted ©.