2010-07-24 15:14:44

மலேசியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதற்குப் பரிசீலனை


ஜூலை24,2010 மலேசியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் மீதானக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது உட்பட பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு ஐம்பதுக்கு மேற்பட்ட நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மலேசியாவில் பெருமளவாக வேலை செய்யும் வெளிநாட்டவரின் எண்ணிக்கையைக் குறைப்பது, பயங்கரவாதத்தோடு தொடர்புடைய நாடுகளிலிருந்து வருபவரின் விசா அனுமதிகளை அவர்கள் மலேசியாவில் வந்து சேர்ந்தவுடன் பரிசீலனை செய்வது போன்ற நடவடிக்கைகள் அரசிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மலேசிய உதவிப் பிரதமர் Muhyiddin Yassin தலைமையில் அடுத்த மாதம் இரண்டாம் தேதி கூடவிருக்கும் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறித்த குழு இந்தப் பரிந்துரைகள் குறித்துப் பரிசீலனை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் மூன்றாண்டுகளுக்குள் மலேசியாவில் வேலை செய்யும் வெளிநாட்டவரின் எண்ணிக்கையை 18 இலட்சத்திலிருந்து 15 இலட்சமாகக் குறைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.

மேலும், மலேசியாவிற்குத் தொழில் வாய்ப்பைப் பெற்றுச் சென்ற இளைஞர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.