2010-07-23 16:25:42

ஸ்பெயினில் ஒரு இலட்சத்து பத்தாயிரத்துக்கு மேற்பட்ட திருமணங்கள் முறிவுபட்டுள்ளன


ஜூலை23,2010 ஸ்பெயினில் கடந்த பத்தாண்டுகளில் ஒரு இலட்சத்து பத்தாயிரத்துக்கு மேற்பட்ட திருமணங்கள் முறிவுபட்டுள்ளன என்றும், இவ்வெண்ணிக்கையில் ஸ்பெயின் ஐரோப்பாவில் முதலிடத்தை வகிக்கின்றது என்றும் குடும்பக் கொள்கை நிறுவனம் அறிவித்தது.

ஸ்பெயினின் தற்போதைய திருமணமுறிவுச் சட்டமே இந்நிலைக்குக் காரணம் என்றுரைத்த இந்நிறுவனத் தலைவர் Eduardo Hertfelder, ஸ்பெயினில் கடந்த பத்து ஆண்டுகளில் இவ்வெண்ணிக்கை மற்ற ஐரோப்பிய நாடுகளை விஞ்சி விட்டது என்று தெரிவித்தார்.

ஸ்பெயினில் 1998ல் 36,072 ஆக இருந்த இவ்வெண்ணிக்கை 2008ல் 1,10,036 என உயர்ந்தது.








All the contents on this site are copyrighted ©.