2010-07-23 16:17:57

வட இந்தியாவில் குருத்துவத்திற்கான அழைத்தல்கள் அதிகரித்து வருகின்றன - சாகர் ஆயர்


ஜூலை23,2010 இந்தியாவில் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வந்தாலும், நாட்டின் வடபகுதியில் குருத்துவத்திற்கான அழைத்தல்கள் அதிகரித்து வருகின்றன என்று இந்திய ஆயர் ஒருவர் கூறினார்.

1968ம் ஆண்டில் சாகர் மறைமாவட்டம் தொடங்கிய போது 600 கத்தோலிக்கரும் மூன்று குருக்களும் இருந்தனர், ஆனால் தற்சமயம் 35 குருக்கள் இருக்கின்றனர் என்று, Aid to the Church in Need என்ற ஜெர்மன் பிறரன்பு நிறுவனத்திடம் கூறினார் அம் மறைமாவட்ட ஆயர் அந்தோணி சிரியத்.

இந்திய சர்வதேச விவகாரங்களுக்கான அமைச்சர் வெளியிட்ட அறிக்கையின்படி, 2009ம் ஆண்டில் மத்திய பிரதேச மாநிலத்தில் சமயம் தொடர்புடைய 654 வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இதன் மூலம் இந்தியாவில் அதிகமான வன்முறைகள் இடம் பெற்ற மாநிலங்களில் மத்திய பிரதேச மாநிலம் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது.








All the contents on this site are copyrighted ©.