2010-07-23 16:27:38

ஆஸ்திரேலியா நியாயமான அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் : ஐ.நா. அகதிகள் அவை


ஜூலை23,2010 நியாயமான அகதிகள் என ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் ஆஸ்திரேலியா அவர்களுக்கான அகதி நிலைமையை வழங்காமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அகதிகள் அவையின் பிராந்திய பிரதிநிதி ரிச்சர்ட் டவல் இக்கேள்வியை எழுப்பியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கான பாதுகாப்பு விசா வழங்கும் நடவடிக்கைகள் ஆஸ்திரேலியாவில் கணிசமாக குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஆஸ்திரேலியாவின் அகதிகள் அவையால் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்.

எனினும் அவர்களுக்கான பாதுகாப்பு விசாக்களை வழங்குவதில் அந்நாட்டு அரசு பின்னிற்பது ஏன்? என அவர் விளக்கம் கேட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.