2010-07-22 15:24:35

வெடிகுண்டு விபத்தில் தன் மனைவியை இழந்த கத்தோலிக்கர் மன்னிப்பைக் குறித்து நேபாளத்தில் பலருக்கும் போதித்து வருகிறார்


ஜூலை 22, 2010 சென்ற ஆண்டு நேபாளத்தின் கத்மண்டு விண்ணேற்ற அன்னை ஆலயத்தில் நடந்த வெடிகுண்டு விபத்தில் தன் மனைவியை இழந்த பாலன் ஜோசப் என்ற கத்தோலிக்கர் மன்னிப்பைக் குறித்து நேபாளத்தில் பலருக்கும் போதித்து வருகிறார்.
2009ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இந்த வெடிகுண்டு தாக்குதலின் ஆண்டு நினைவையொட்டி பல இடங்களில் பேசி வரும் பாலன் ஜோசப்பின் ஒரு முயற்சியாக, இச்செவ்வாய் முதல் வியாழன் வரை நடைபெற்ற கிறிஸ்துவர்களின் ஒற்றுமைப் பணி என்ற அமைப்பு நடத்திய கூட்டத்தில் அவர் மன்னிப்பு பற்றி பேசினார்.
இந்த வெடிகுண்டு தாக்குதலுக்குக் காரணமானவர்களை பாலன் சந்தித்துப் பேசியதாகவும், அவர்களை நேரில் சந்தித்து, மன்னித்த பிறகு மனதில் பெரும் அமைதியை உணர்வதாகவும் அவர் கூறினார்.இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டுச் செய்த இந்தக் கூட்டத்தின் தலைவன் கிறிஸ்துவத்தைத் தழுவியுள்ளார் என்றும் தன் நேரத்தைச் சிறையில் செபிப்பதில் கழிக்கிறார் என்றும் ஜோசப் இக்கூட்டத்தில் பேசினார்.







All the contents on this site are copyrighted ©.