2010-07-22 15:24:00

AIDS நோயைக் கட்டுப்படுத்தத் தேவையான நிதி உதவிகள் குறைந்து வருவதால், பல உயிர்களை இழக்கக்கூடிய ஆபத்தில் இருக்கிறோம் - கத்தோலிக்க சமூகப்பணி ஆர்வலர்கள்


ஜூலை 22, 2010 AIDS நோயைக் கட்டுப்படுத்தத் தேவையான நிதி உதவிகளை உலகின் பல அரசுகள் குறைத்து வருவதால், பல உயிர்களை இழக்கக்கூடிய ஆபத்தில் இருக்கிறோம் என கத்தோலிக்க சமூகப்பணி ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
இஞ்ஞாயிறு முதல் வெள்ளி வரை வியென்னாவில் நடைபெற்று வரும் 18வது அகில உலக AIDS கருத்தரங்கில் கலந்து கொண்டு வரும் கத்தோலிக்க சமூகப்பணி ஆர்வலர்கள், இப்புதனன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் இவ்வாறு கூறினர்.
நாடுகள் வழங்கும் நிதி குறைந்து கொண்டே வரும் போது, இந்த நோய் கண்டவர்களில் யாரை வாழவைப்பது, யாரை இறக்க விடுவது என்ற இக்கட்டான கேள்விகளை சமூகப்பணி ஆர்வலர்கள் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று நமிபிய ஆயர் பேரவையின் செயல் திட்டங்களில் ஒன்றான கத்தோலிக்க AIDS செயல்கள் என்ற நிறுவனத்தின் இயக்குனர் அருள்தந்தை Richard Bauer செய்தியாளர்களிடம் கூறினார்.AIDS நோயாளிகளுடன் பணி புரியும் போது, உண்மையான அன்பும், கனிவும் காட்டப்பட வேண்டும் எனவே, கத்தோலிக்கர்களைப் போல் கடவுள் நம்பிக்கை கொண்ட குழுக்களைச் சார்ந்தவர்களாலேயே இது போன்ற பணியில் எளிதாக ஈடுபட முடிகிறதென நார்வே நாட்டின் AIDS நோய் நற்பணி தூதரான Sigrun Mogedal கூறினார்.







All the contents on this site are copyrighted ©.