2010-07-17 15:45:47

ஒரேபாலினத் திருமணங்களைச் சட்டரீதியாக அங்கீகரித்திருப்பது கடவுளுக்கு எதிரான போர் - அர்ஜென்டினா பேராயர்


ஜூலை17,2010 அர்ஜென்டினாவில் ஒரேபாலினத் திருமணங்களைச் சட்டரீதியாக அங்கீகரிப்பதற்கு நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், கடவுளுக்கு எதிரான போர் என்று கண்டித்துப் பேசியுள்ளார் அந்நாட்டுப் பேராயர் Jorge Mario Bergoglio.

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா தலைநகர் Buenos Aires பேராயர் பெர்கோலியோ உட்பட அந்நாட்டின் அனைத்து ஆயர்களும், ஒரேபாலினத் திருமணங்கள் தொடர்பாக பல அறிக்கைகள் வெளியிட்டிருந்ததைக் குறிப்பிட்டுள்ளது திருப்பீடசார்பு தினத்தாள் லொசர்வாத்தோரே ரொமானோ.

ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்குமிடையேயான திருமணம் மற்றும் குடும்பத்தின் உயிரியல் மற்றும் உடலியல் கூறுகளை ஒரேபாலினத் திருமணங்கள் கொண்டிருக்கவில்லை என்றும், இவ்வகையான பிணைப்பில் திருமணப்பந்தத்தின் கூறுகளும் வாழ்வைப் பரிமாறுவதற்கான அமைப்பும் இல்லை என்றும் அர்ஜென்டினா ஆயர்கள் தங்கள் அறிக்கைகள் மூலம் பலமுறை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே, அரசின் இந்நடவடிக்கையை எதிர்த்து, தலைநகரில் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது







All the contents on this site are copyrighted ©.