2010-07-16 15:54:41

பெண்களைக் குருக்களாகத் திருநிலைப்படுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கானத் தண்டனை குறித்த வத்திக்கானின் விளக்கங்களுக்கு அமெரிக்கத் தலத்திருச்சபை வரவேற்பு


ஜூலை16,2010 பெண்களைக் குருக்களாகத் திருநிலைப்படுத்துவதற்கான முயற்சிகளுக்குத் திருச்சபைசட்டரீதியான தண்டனைகள் வழங்குவது குறித்த வத்திக்கானின் அண்மை விளக்கங்களை வரவேற்றுள்ளது அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலத்திருச்சபை.

வத்திக்கானின் இந்நடவடிக்கை, குருத்துவம் என்ற திருவருட்சாதனத்திற்கு எதிராகச் செய்யப்படும் குற்றங்களின் தன்மையை எடுத்துக்காட்டுவதாக இருக்கின்றது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் விசுவாசக்கோட்பாட்டு ஆணையத்தின் தலைவர் பேராயர் Donald Wuerl கூறினார்.

இவ்வியாழனன்று வத்திக்கான் வெளியிட்ட அறிக்கையின்படி, பெண்களைக் குருக்களாகத் திருநிலைப்படுத்துவதற்கு முயற்சிப்பது, திருச்சபை சட்டத்தை மீறும் கனமான குற்றமாகும். இந்தக் குற்றம் எப்பொழுதும் திருப்பீடத்தின் தீர்ப்புக்கு உட்பட்டதாகும்.

இந்த அறிக்கையை வரவேற்றுப் பேசிய பேராயர் Wuerl, ஏழு திருவருட்சாதனங்களும் ஒன்றோடொன்று இணைந்தவை மற்றும் இவை கத்தோலிக்கத் திருச்சபையையும் ஒவ்வொரு கத்தோலிக்கரின் விசுவாச வாழ்வையும் தெளிவாகக் காண்பிப்பவை என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.