2010-07-16 16:08:49

பங்களாதேஷ் தலைநகரில் மட்டும் குறைந்தது ஏழு இலட்சம் பேர் பிச்சை எடுக்கின்றனர்


ஜூலை16,2010 பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் மட்டும் குறைந்தது ஏழு இலட்சம் பேர் பிச்சை எடுக்கும்வேளை, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கு அரசு திட்டமிட்டு வருகின்றது என்று தேசிய மாற்றுத்திறனாளிகள் வளர்ச்சி அமைப்பின் இயக்குனர் முகமத் நுருல் கபிட் தெரிவித்தார்.

டாக்காவின் இரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், சந்தைகள் போன்ற பொது இடங்களில் தர்மம் எடுப்பதற்கு பலர் கட்டாயப்படுத்தப்படுகி்ன்றனர், இதற்காக அவர்களின் உடல் உறுப்புகள்கூட ஊனமாக்கப்படுகின்றன என்றும் நுருல் கபிட் கூறினார்.

இவர்களின் மறுவாழ்வுக்காக பங்களாதேஷ் அரசு இரண்டு கோடி டாலரை முதலீடு செய்ய வேண்டியுள்ளது என்று அவர் கூறினார்.

பங்களாதேஷின் 2010ம் ஆண்டின் “சாலை பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு” விதிமுறையின்படி, ஒருவரைத் தர்மம் எடுக்கக் கட்டாயப்படுத்துபவருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனையும் ஏறத்தாழ ஏழாயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.