2010-07-16 16:03:58

அன்னைதெரேசா நினைவு நாணயம்


ஜூலை16,2010 வருகிற ஆகஸ்டில் முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா பிறந்ததன் நூறாம் ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு அன்னைதெரேசா நினைவு நாணயத்தை வெளியிடுவதற்கான இந்திய அரசின் நடவடிக்கையை வரவேற்றுள்ளது தலத்திருச்சபை.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் இந்த நடவடிக்கை, மிக நேர்த்தியான செயல் என்று பாராட்டி அதற்கு நன்றி தெரிவித்துள்ளார் இந்திய ஆயர் பேரவையின் பேச்சாளர் அருள்திரு பாபு ஜோசப்.

புது டெல்லியில் வருகிற ஆகஸ்ட் 28ம் தேதி இடம் பெறும் நிகழ்ச்சியில் அன்னை தெரேசா நினைவு நாணயத்தை வெளியிடுவார் இந்திய அரசுத்தலைவர் பிரதிபா பட்டீல்.

1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி பிறந்த அன்னை தெரேசா, 1929ம் ஆண்டு லொரேட்டோ சபை அருட்சகோதரியாக கொல்கட்டா வந்தார். 1949ல் பிறரன்பு மறைபோதகச் சபையைத் தொடங்கிய இவர், 1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி இறந்தார்.








All the contents on this site are copyrighted ©.