2010-07-15 14:48:37

ஜூலை 16 நாளும் ஒரு நல்லெண்ணம்


அந்தத் தெரு வழியே ஒரு பிச்சைக்காரன் சென்று கொண்டிருந்தான். அப்போது ஒரு வீட்டிலிருந்து ஓர் ஆள் செத்த எலியை வெளியே கொண்டு வந்து போட வந்தார். அப்போது அந்தப் பிச்சைக்காரன், சார், தயவுசெய்து அதை என்னிடம் கொடுங்கள் என்றான். இதை வைத்து என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டுவிட்டு அதை அவனிடம் கொடுத்தார். அவன் அதைக் கொண்டு போய், தனது பூனைக்கு உணவு தேடிக் கொண்டிருந்தவனிடம் விற்றான். அந்தக் காசை வைத்து மீன்பிடிக்க ஒரு தூண்டில் வாங்கினான். அப்படியே சிறிது சிறிதாக பெரிய மீன் வியாபாரியாகி விட்டான்.பெரியோர் சொல்கிறார்கள் - சிறுதுளி பெருவெள்ளம். முயற்சி திருவினையாக்கும். மனந்தளராமல் செய்யப்படும் எந்த ஒரு முயற்சிக்கும் வெற்றி நிச்சயம். சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான் என்று.







All the contents on this site are copyrighted ©.