2010-07-15 14:39:10

இறந்து போன குருவைக் குறித்து எழுப்பப்பட்ட பொய்யான அவதூறுகள் தன்னை மிகவும் வேதனைபடுத்தியுள்ளது - அமெரிக்க பேராயர்


ஜூலை 15, 2010 இறந்து போன குரு ஒருவரைக் குறித்து எழுப்பப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று நீதி மன்றம் தீர்ப்பளித்ததை ஓட்டி, அக்குருவைக் குறித்து அவதூறுகள் எழுந்தது தன்னை மிகவும் வேதனைபடுத்தியுள்ளதென அமெரிக்க ஆயர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
1967ம் ஆண்டு, தன் 77வது வயதில் இறந்த டென்வர் உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குரு, தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று அவரது இறப்பிற்குப் பின் பெண் ஒருவர், தன் பெயரை மறைத்து அவர் மீது வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கின் தீர்ப்பு அண்மையில் வெளியான போது, அப்பெண் கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்புக்குப் பின், இந்த வழக்கு குறித்து இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய டென்வர் உயர் மறைமாவட்ட பேராயர் சார்ல்ஸ் சாபுட் (Chaput), William Higgins என்ற அந்த குருவின் பெயரைக் களங்கப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தன்னை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது என்று கூறினார்.குருக்களின் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டோரின் நிலைகளைக் கனிவோடும், கவனத்தோடும் அணுகும் அதே வேளையில், பல குருக்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் பெயரை நிலை நாட்டிச் சென்றுள்ள வேளையில் அவர்களுக்கு எதிராகச் சொல்லப்படும் அவதூறான செய்திகளையும் பொய்யாக்குவதில் மறைமாவட்டம் தடுமாறாது என்று பேராயர் சாபுட் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.