2010-07-13 16:05:55

பாதுகாப்புக் கொள்கைகள் குறித்தவைகளில் தேசிய அளவிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற ஆதரவை வழங்கியுள்ளது மெக்ஸிகோ தலத்திருச்சபை


ஜூலை 13, 2010 பாதுகாப்புக் கொள்கைகள் குறித்தவைகளில் தேசிய அளவிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற வேண்டும் என்ற மெக்ஸிகோ அரசுத்தலைவரின் அழைப்புக்கு தன் ஆதரவை வழங்கியுள்ளது தலத்திருச்சபை.

மெக்ஸிகோவின் 4 ஆயர்கள் அரசுத்தலைவருடன் கடந்த வார இறுதியில் நடத்தியச் சந்திப்பிற்குப்பின், தேசிய அளவிலான பேச்சுவார்த்தைகளுக்கான தலத்திருச்சபையின் ஆதரவு குறித்தச் செய்தியை வெளியிட்டுள்ளது அரசுத்தலைவர் Felipe Calderonன் அலுவலகம்.

மெக்ஸிகோவின் வன்முறைக் கலாச்சாரம் குறித்தும் அமைதியை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் குறித்தும் தலத்திருச்சபை ஏற்கனவே வெளியிட்டிருந்த மேய்ப்புப்பணி சுற்றறிக்கை குறித்தும் அரசுத் தலைவருடன் ஆன சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது.

மெக்ஸிகோவில் போதைப்பொருள் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் ராணுவத்தையும் காவல்துறையையும் அதிகம் சார்ந்திருக்கும் அரசின் போக்கு மாற்றப்பட்டு, நாட்டின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தப்படவேண்டும் எனவும் தங்கள் மேய்ப்புப் பணிச் சுற்றறிக்கையில் விண்ணப்பித்திருந்தனர் ஆயர்கள்.








All the contents on this site are copyrighted ©.