2010-07-13 16:11:13

டுனிசியாவின் மனித உரிமை மீறல்கள் குறித்துக் குற்றம் சாட்டியுள்ளது Amnesty International


ஜூலை 13, 2010 டுனிசியாவில் மனித உரிமை நடவடிக்கையாளர்களின் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தடுக்கப்படுவதாகவும், மனித உரிமை நடவடிக்கையாளர்கள் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அரசைக் குற்றம் சாட்டியுள்ளது Amnesty International எனும் மனித உரிமைகள் கழகம்.

அரசு சாரா சமூக இயக்கங்கள் பல அரசால் மௌனமாக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டும் இம்மனித உரிமைகள் கழகம், மனித உரிமை நடவடிக்கையாளர்கள் பலர் காவல்துறையின் தொடர்ந்த கண்காணிப்பின் கீழ் இருப்பதாகவும் கவலையை வெளியிட்டுள்ளது.

1 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ள டுனிசியா நாடு, ஐரோப்பாவுடன் நெருங்கிய தொடர்பு கொள்ள முயன்று வரும் இவ்வேளையில் தன் மனித உரிமை நடவடிக்கைகளையும் மேம்படுத்துவது இன்றியமையாதது என்கிறது Amnesty International மனித உரிமை கழகம்.








All the contents on this site are copyrighted ©.