2010-07-13 16:02:43

சமய சுதந்திரமே உலக சமாதானத்திற்கான வழி - திருத்தந்தையின் உலக சமாதான நாளுக்கான மையக் கருத்து


ஜூலை 13, 2010 மக்கள் அவரவர் சமயங்களைப் பின்பற்றுவதில் சுதந்திரம் அளிப்பதே உலக சமாதானத்திற்கு வழி வகுக்கும் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

1968ம் ஆண்டிலிருந்து புத்தாண்டு நாளான சனவரி முதல் நாளன்று உலக சமாதான நாளாகக் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. வருகிற 2011ம் ஆண்டின் உலக சமாதான நாளுக்கான கருத்தைத் தேர்ந்தெடுத்து, தன் செய்தியை வெளியிட்ட திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.

தனி நபரின் மனித மாண்பை நிலைநாட்டுவதில் சமய உரிமைகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறதென்றும், மனித குலத்தின் மற்றெல்லா விடுதலைகளிலும், சமய விடுதலையே தலையாய விடுதலை என்றும் திருத்தந்தை தன் செய்தியில் கூறியுள்ளார்.

அனைத்து மனிதரும் உண்மையைத் தேடி வருகின்றனர் என்றும், இந்த உண்மையைக் காணத் தேவையான சமய சுதந்திரம் ஒவ்வொரு நாட்டிலும் வழங்கப்பட வேண்டுமென்றும் திருத்தந்தை தன் ஆவலை வெளியிட்டார்.

உண்மையின் பல பரிமாணங்களை வெளிப்படுத்தும் வகையில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 2006ம் ஆண்டிலிருந்து உலக சமாதான நாளுக்கென பொருத்தமான கருத்துக்களை வழங்கி வருகிறார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.