2010-07-13 16:12:49

கேரளாவின் பஞ்சாயத்துத் தேர்தல்கள் குறித்த திருச்சபையின் அரசியல் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார் பேராயர் சூசை பாக்கியம்


ஜூலை 13, 2010 கேராளாவில் இடம்பெற உள்ள பஞ்சாயத்து மற்றும் கிராம நிர்வாகப் பதவிகளுக்கானத் தேர்தல்கள் குறித்த அரசியல் நிலைப்பாடு ஒன்றை அம்மாநில இலத்தீன் ரீதி கத்தோலிக்க அவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார் பேராயர் சூசை பாக்கியம்.

அரசியலில் தலையிடும் எண்ணமோ, அரசியலை மதத்தோடு கலக்கும் எண்ணமோ தனக்கு இல்லை என உரைத்த திருவனந்தபுரம் பேராயர் சூசை பாக்கியம், நகர நிர்வாகப்பணிகளில் இலத்தீன் கத்தோலிக்கர்களுக்கு உரிய பிரதிநித்துவம் வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துவதே நோக்கம் என்றார்.

கேரள இலத்தீன் ரீதி ஆயர்களின் 16வது பொது அவைக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் மதிப்பீடுகள் மற்றும் வாக்குறுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறினார் பேராயர்.

கேரளாவின் இலத்தீன் ரீதி கத்தோலிக்கர்கள் பாரம்பரியமாக ஒதுக்கப்பட்டு வருவதற்கு தீர்வு காண்பதில் எவ்வித நிலைத்த விடையும் கிட்டவில்லை என்ற கவலையும் பேராயர் சூசை பாக்கியத்தால் வெளியிடப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.