2010-07-13 16:08:44

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் துறவு வாழ்வைத் தேர்ந்துகொள்வோரின் எண்ணிக்கை சிறிய அளவில் அதிகரித்துள்ளது


ஜூலை 13, 2010 இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் துறவு வாழ்வைத் தேர்ந்துகொள்வோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் சிறிய அளவில் அதிகரித்துள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் 1465 துறவு மடங்களில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வு, இளையோரிடையே பணியாற்றும் துறவு இல்லங்களுக்கான புதிய அங்கத்தினர்களின் எண்ணிக்கையே அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.

இவ்வாய்வின் படி இங்கிலாந்தில் உள்ள அருட்கன்னியர்களுள் பாதி பேர் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும், ஆண் துறவிகளுள் 22 விழுக்காட்டினர் 80 வயதிற்கு அதிகமானோர் எனவும் தெரிய வந்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.