2010-07-12 15:55:06

ஜூலை 13 நாளும் ஒரு நல்லெண்ணம்


இரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. ஜப்பானியர்கள் ஒரு பீரங்கியை வைத்துக் கொண்டு தாக்குதல் நடத்தினார்கள். இரஷ்யர்களின் கை ஓங்கியிருந்ததால் ஜப்பானியர்கள் அந்த ஒரே பீரங்கியை மலைமீது விட்டுவிட்டு ஓடிப்போய்விட்டார்களாம். ஆனால் நாட்டுப் பற்று மிகுந்த அந்த ஜப்பானிய வீரன், அதை இரஷ்யர்கள் கைப்பற்றாமல் இருப்பதற்காக அதனுள் சென்று படுத்துக் கொண்டான். மறுநாள் காலையில் அநதப் பீரங்கியை பரிசோதிக்க விரும்பிய இரஷ்ய வீரர்கள் அதனுள் குண்டை வைத்து வெடிக்கச் செய்தனர். அதிலிருந்து இரத்தம் வடிந்தவுடன் இரஷ்யர்கள் பயந்து ஓடிவிட்டார்களாம்.

எந்த வித சுயநலநோக்கமும் இல்லாமல் நாட்டிற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தன்னலமற்ற உயிர், நாட்டையே காப்பாற்றியிருக்கிறது.

விவேகானந்தர் சொன்னார் - இந்த உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல. வெற்றியோ தோல்வியோ எதுவந்தாலும் கொண்ட கடமையில் முழுமையாக ஈடுபட்டு, வெற்றி பெறுவதற்காகவே நாம் பிறந்திருக்கிறோம் என்று.








All the contents on this site are copyrighted ©.