2010-07-12 15:51:44

ஜூலை 12 நாளும் ஒரு நல்லெண்ணம்


“ஓரெட்டில் வளர்க்காத பிள்ளையும், ஈரெட்டில் கற்காத கல்வியும் மூவெட்டில் முடிக்காத மணமும் பயனற்றவை” என்று பெரியோர் சொல்கிறார்கள். இதற்கு ஜார்ஜ் லாஹிமர் என்பவர் “ஓர் எளிய காரியத்தைத் தள்ளிப் போட்டால் அது கடினமாகிறது. கடினமான காரியத்தைத் தள்ளிப் போட்டால் அது முடியாத காரியமாகிப் போகிறது” என்று விளக்கம் அளிக்கிறார். மில்டன் என்பவரோ, “மணிகளுக்குச் சிறகுகள் உண்டு. அவை காலத்தை ஏற்படுத்தியவரிடம் சென்று, நாம் அவற்றை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை அறிவிக்கும்” என்று சொன்னார். தேவைக்கு அதிகமானத் தாமதங்கள், பின்விளைவுகளையும், பக்க விளைவுகளையும், எதிர்பாராத விளைவுகளையும், மாற்றவே முடியாத கசப்பான விளைவுகளையும் ஏற்படுத்தும். இதனால்தான் உலகில் பெரும்பாலான பக்தர்களைக் கொண்ட மதம் தாமதம் என்கிறார்கள்.








All the contents on this site are copyrighted ©.