2010-07-12 15:48:40

அழகான வருங்காலத்தை அமைத்துக் கொடுக்கத் தவறியுள்ளது அயர்லாந்து சமூகம் என்கிறார் அந்நாட்டு ஆயர் ஒருவர்


ஜூலை 12, 2010 இளையத் தலைமுறையினருக்கு ஓர் அழகான வருங்காலத்தை அமைத்துக் கொடுத்துள்ளோம் என பெருமைப்படும் நிலையில் இன்றைய அயர்லாந்து சமூகம் இல்லை என கவலையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.

ஒரு சிலரின் வெற்றிக்காக ஏழைகள் வழங்கி வரும் விலை குறித்து கவலைப்படாமல் இன்றைய பணக்காரர்கள் தங்கள் பெயரையும் சேமிப்புகளையும் பாதுகாப்பதிலேயே கவனமாயிருக்கிறார்கள் எனக் குற்றம் சாட்டிய ஆயர் Donal McKeown, குற்றங்கள் குறித்து பாராமுகமாய் இருந்த குற்றவாளிகள் என நம்மை வருங்காலம் குற்றம் சாட்டும் எனவும் தெரிவித்தார்.

ஐரோப்பாவிலேயே தற்கொலை மிகுதியாயுள்ள நாடுகளில் அயர்லாந்தும் ஒன்றாக இருப்பது, குடிப்பழக்கம், போதைப்பொருள் பயன்பாடு, மனச்சிதைவு நோய் ஆகியவைகளும் அந்நாட்டில் பெருகியுள்ளது போன்றவை குறித்தும் தன் கவலையை வெளியிட்டார் ஆயர்.

உண்மையில் நிலைத்து நிற்க எவ்விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கும் உறுதி மிக்க சமுதாயத்தை உருவாக்கவேண்டிய மிகப்பெரும் சவால் அயர்லாந்துத் திருச்சபை முன் உள்ளது எனவும் கூறினார் ஆயர் McKeown.








All the contents on this site are copyrighted ©.