2010-07-10 16:14:17

ஆசியக் கத்தோலிக்கத் தலைவர்களின் கூட்டமொன்றை வரும் திங்கள் முதல் ஞாயிறு வரை தாய்லாந்தில் நடத்த உள்ளது மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளுக்கான திருப்பீட அவை.


ஜூலை 10, 2010. ஆசியக் கத்தோலிக்கத்தலைவர்களின் கூட்டமொன்றை வரும் திங்கள் முதல் ஞாயிறு வரை தாய்லாந்தில் நடத்த உள்ளது மதங்களிடையேயானப் பேச்சுவார்த்தைகளுக்கான திருப்பீட அவை.

இத்திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran னுடன் ஆசிய திருச்சபைகளின் 36 அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், தாய்வான், தாய்லாந்து, மலேசியா, மியான்மார், ஜப்பான், கொரியா, லாவோஸ், வியட்நாம், பிலிப்பீன்ஸ், நேபாளம் ஆகிய நாடுகளின் ஆயர் பேரவைகளின் மதங்களிடையேயானப் பேச்சுவார்த்தைகளுக்கான அவைகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இக்கூட்டத்தில், “புத்தம், தாவோயிஸம், கன்ஃபூசியனிசம், ஷிந்தோயிசம் ஆகியவைகளுடன் கிறிஸ்தவ உரையாடல்”, “இந்து, சீக்கியம் மற்றும் ஜைன மதங்களுடன் கிறிஸ்தவ உரையாடல்”, “இஸ்லாமியர்களுடன் கிறிஸ்தவ உரையாடல்” என்ற மூன்று தலைப்புகளில் விவாதங்கள் இடம்பெற உள்ளன.

மதங்களிடையேயானப் பேச்சுவார்த்தைகளுக்கானத் திருப்பீட அவை ஆசிய கத்தோலிக்கத் தலைவர்களுடன் நடத்தும் ஐந்தாவது முக்கியக் கூட்டமாகும் இது.

முதன் முதலாக இத்தகையக் கூட்டம் இவ்வவையால் தாய்லாந்தில் தான் 1988ம் ஆண்டு துவக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.