2010-07-09 15:41:05

ஹெயிட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆறு மாதங்கள் சென்றுள்ள வேளையில் உதவிகள் செய்த வீரர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறார் அந்நாட்டு ஆயர்


ஜூலை 09, 2010 ஹெயிட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆறு மாதங்கள் சென்றுள்ள இவ்வேளையில் அந்தப் பேரழிவின் போது உடனே வந்து உதவிகள் செய்த வீரர்களை நன்றியோடு நினைத்துப் பார்ப்பதாக என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
அகில உலகக் காரித்தாஸ் நிறுவனம் 23 லட்சம் பேருக்கு உதவிகள் செய்ததை நினைவு கூர்ந்த ஆயர் Pierre-André Dumas, இந்த பேரழிவைக் கேள்விப் பட்டதும் தங்கள் நாட்டுக்கு விரைந்தோடி வந்தவர்கள், உதவிகள் செய்தவர்கள் உண்மையிலேயே வீரர்கள், புகழ் பெற்ற நாயகர்கள் என்று பாராட்டினார்.
ஹெயிட்டியில் நடந்த இந்தப் பேரழிவு உலகிற்குப் பல பாடங்களைக் கற்றுத்தர வேண்டும் என்று கூறிய ஆயர், உலகின் வறுமை, அநீதிகள் இவற்றை முற்றிலும் களைவதற்கு அனைத்து மக்களும் முன்னேற்றம் அடையக்கூடிய வண்ணம் மேற்கொள்ளப்படும் திட்டங்களே இந்த உலகில் புதிய கலாச்சாரத்தை உருவாக்கும் என்ற பாடங்களை இந்தப் பேரழிவு நமக்குச் சொல்லித் தந்துள்ளதென விளக்கினார்.2 லட்சம் பேருக்கு மேல் பலியான இந்த நிலநடுக்கத்தின் பேரழிவுகளைச் சீரமைக்க காரித்தாஸ் போன்ற பல உலக நிறுவனங்களின் 4.7 கோடி டாலர் மதிப்புள்ள உதவிகள் வந்து சேர்ந்தாலும், இன்னும் 10 லட்சம் மக்கள் வீட்டு வசதிகள் இன்றி இருக்கின்றனர் என்று ஆயர் Pierre-André Dumas கூறினார்.







All the contents on this site are copyrighted ©.