2010-07-09 15:41:55

பாகிஸ்தானில் ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்திலிருந்து கிறிஸ்தவர்கள் தடுக்கப்பட்டுள்ளனர்


ஜூலை 09, 2010 பாகிஸ்தான் பஞ்சாப் பகுதியில் "dastar Khwan" என்ற சேவை மூலம் ஏழைகளுக்கு மிகக் குறைந்த விலையில் உணவு வழங்கும் திட்டத்திலிருந்து கிறிஸ்தவர்கள் தடுக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் பஞ்சாப் மாநில அரசு மதியம் ஒரு மணி முதல் மூன்று மணி வரை ஏழைகளுக்கு ஐந்து ரூபாய்க்கு உணவு வழங்குவதற்கு சீட்டுகள் கொடுக்கும் சேவையை ஆரம்பித்தது என்றும், அந்தச் சீட்டுக்களைப் பெறுவதற்கு Toba Tek Singh பகுதி கிறிஸ்துவர்கள் தடுக்கப்பட்டனர் என்றும் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
மத அடிப்படையில் எழுந்துள்ள இந்த பாகுபாடு ஏற்றுக் கொள்ளப்பட முடியாததென்றும், மக்களின் வரிப்பணத்தில் உருவான இந்தத் திட்டத்திலிருந்து கிறிஸ்துவர்களைத் தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்றும், Pakistan Muslim Leagueன் சிறுபான்மையினர் குழுவின் தலைவர் Rasheed Jalal கூறினார்.Jamiat Islami என்ற குழுவின் உறுப்பினரும், மாவட்ட வேளாண்மைக் குழுவின் தலைவருமான முஹம்மது சயீத் Toba Tek Singh பகுதியில் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் அனைவரும் சேர்ந்து உண்ணும்படி இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகக் கூறினார் என்றும், இதனால், அப்பகுதி கிறிஸ்தவர்கள் மகிழ்ந்துள்ளனர் என்றும் அச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.