2010-07-09 15:41:19

பதினைந்து மாதங்களாகச் சிறை வைக்கப்பட்டிருந்த சீன ஆயர் இப்புதனன்று விடுவிக்கபட்டார்


ஜூலை 09, 2010 பதினைந்து மாதங்களாகச் சிறை வைக்கப்பட்டிருந்த சீன ஆயர் இப்புதனன்று விடுவிக்கபட்டார். ஆயர் Julius Jia Zhiguo 2009ம் ஆண்டு மார்ச் மாதம் சீன அரசால் கைது செய்யப்பட்டார்.
சீனாவில், அரசால் அனுமதி வழங்கப்பட்ட இடத்தில், அரசால் நியமிக்கப்பட்ட ஆட்களால் மட்டுமே மதத் தொடர்பான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனும் சட்டம் உள்ளது. இந்த செயல்பாடுகள் ‘நாட்டுப்பற்றுடையோர் கழகத்’தின் மேற்பார்வையில் செயல்படவேண்டும். இந்தக் கழகத்தில் இணைய மறுத்ததன் காரணமாக ஆயர் Zhiguo கைது செய்யப்பட்டார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இப்புதன் விடுதலை செய்யப்பட்ட ஆயர் Zhiguo அன்று இரவே ஏறத்தாழ நூறு விசுவாசிகளுடன் ஒரு கிராமத்தில் திருப்பலி நிறைவேற்றினார்.மேலும், 76 வயதான ஆயர் James Su Zhimin, 1996ம் ஆண்டிலிருந்தும், 87 வயதான ஆயர் Cosmas Shi Enxiang, 2001ம் ஆண்டிலிருந்தும் காணவில்லை என்றும் அவர்களும் சீன அரசின் சிறைகளில் இருக்கலாம் என்றும் செய்திக் குறிப்புகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.