2010-07-09 15:40:40

கொலம்பியா ஆயர் பேரவையின் கூட்டத்தில் அந்நாட்டின் முக்கிய பிரச்சனைகள் பேசப்படுகின்றன


ஜூலை 09, 2010 இம்மாதம் தங்கள் நாட்டு விடுதலையின் 200வது ஆண்டைக் கொண்டாட உள்ள கொலம்பியா நாடு மூன்று முக்கிய பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது என அந்நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.
கொலம்பியா ஆயர் பேரவையின் கூட்டத்தில் இந்த வாரம் கலந்து கொண்டிருக்கும் அந்நாட்டின் 78 ஆயர்கள், வறுமை, வேலை வாய்ப்பின்மை, வன்முறை என்ற மூன்று சவால்களைத் தங்கள் நாடு சந்தித்து வருகிறதெனக் கூறியுள்ளனர்.
கொலம்பியா நாடு செல்வத்தில் சிறந்தாலும், இந்த நாட்டில் இன்னும் மக்கள் தொகையில் பாதி பேருக்கு மேல் வறுமையில் வாடுவது மறுக்க முடியாத ஓர் உண்மை என்று ஆயர் பேரவையின் தலைவரான பேராயர் Jesus Ruben Salazar Gomez செய்தியாளர்களிடம் கூறினார். நாட்டில் நிலவி வரும் வன்முறைகள் குறித்துப் பேசிய பேராயர் Gomez அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களுக்குப் பின் புதிய அரசு பதவி ஏற்றதும், நாட்டில் இயங்கி வரும் புரட்சிக் குழுவுடன் பேச்சு வார்த்தைகளைத் தொடர தலத் திருச்சபையின் உதவியை அரசு நாடினால், அந்த முயற்சிக்கு முழு ஒத்துழைப்பையும் தருவதற்கு தயார் என்ற உறுதியைத் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.