2010-07-09 15:41:44

குருக்கள், அருள் சகோதரிகள் உட்பட 1000 பேருக்கு அதிகமானவர்கள் மத்திய பிரதேச அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்


ஜூலை 09, 2010 குருக்கள், அருள் சகோதரிகள் உட்பட 1000 பேருக்கு அதிகமானவர்கள் மத்திய பிரதேச அரசுக்கு எதிராக இச்செவ்வாயன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1984ம் ஆண்டு போபால் நச்சு வாயு கசிவினால் 20,000 பேருக்கு மேல் இறந்த அந்த விபத்திற்குப் பின், Union Carbide தொழிற்சாலையில் உள்ள 346 டன் எடையுள்ள நச்சுப் பொருட்களை அப்புறப்படுத்த உயர் நீதி மன்றம் மத்திய பிரதேச அரசுக்கு ஆணையிட்டுள்ளது.
இந்த ஆணையை நிறைவேற்ற, மத்திய பிரதேச அரசு அந்த நச்சுப் பொருட்களை இந்தூருக்கருகே உள்ள பிதம்பூர் எனும் இடத்தில் வைத்து எரிக்கத் தீர்மானித்திருப்பதை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.அரசின் இந்த முடிவு இன்னும் பல ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், இந்த நச்சுப் பொருட்களை அழிப்பதற்கு இன்னும் பாதுகாப்பான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென இப்போராட்டத்தில் கலந்து கொண்ட இறைவாக்கு சபையின் அருள் தந்தை பிரசாத் குழிவேலில் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.