2010-07-08 16:09:14

ஜூலை 09 நாளும் ஒரு நல்லெண்ணம்


“எங்கும் எதிலும் வெற்றியடைய முடியவில்லையெனில் நம்மை நாம் மனிதர்கள் என்றழைப்பதில் என்ன பொருள்?” என்று கேட்டவர் மிராபு. ஒவ்வொரு மனிதனும் அவனது மகத்துவத்திலும் சொந்த சாத்தியக் கூறுகளிலும் கொள்ளும் நம்பிக்கை எதையும் சாதிப்பதற்கான மனவுறுதியைப் பரிசாய்த் தரும். முழுமனதுடன் செய்யத் துணிந்ததைச் செய்யவிடாமல் செயல்திறனைக் குலைக்கும் போது மனிதன் தனக்குத்தானே எதிரியாக மாறுகிறான். ஒருவருக்குத் தன்னம்பிக்கை இல்லாத போது அவரது சக்தியும் சூன்யமாகும். ஒவ்வொருவரின் சுயநம்பிக்கையைப் பொருத்தே அவரது சாதனைகள் அமையும். நம்பிக்கை வாழ்க்கையின் நங்கூரம் போன்றது. நம்புவோரே வாழ்வைக் கொடுக்க முடியும். படிப்பில் நம்பிக்கையை இழந்தால் தேர்வுகள் நம்மைப் பார்த்து சிரிக்கும். நட்பில் நம்பிக்கை இழந்தால் பிரிவுகள் நம்மை பார்த்து சிரிக்கும். கடமையில் நம்பிக்கை இழந்தால் கஷடங்கள் நம்மை பார்த்து சிரிக்கும். நிகழ்காலத்தில் நம்பிக்கை இழந்தால் எதிர்காலம் நம்மை பார்த்து சிரிக்கும். எதிலும் நம்பிக்கையோடு இருந்தால் வாழ்வில் எல்லாமே சிறக்கும்.







All the contents on this site are copyrighted ©.