2010-07-08 15:39:16

அடிப்படை தேவைகளுக்குப் பிறகு அரசியல் தீர்வு இலங்கைக் குழுவின் பரிந்துரை


ஜூலை 08, 2010 புதுடில்லி சென்றுள்ள இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் உட்பட பலரை சந்தித்து உரையாடியுள்ளனர்.
இலங்கையில் பல ஆண்டுகளாக இருந்து வரும் இனைப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இந்தியா உதவ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்ததாகச் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மற்றும் இராணுவத்தின் கட்டுமானங்களுக்கு நிலங்கள் எடுக்கப்படும் விடயங்கள் குறித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கவலைகள் இந்தியத் தலைவர்களிடம் எடுத்துக் கூறப்பட்டது.
இதற்கான உத்திரவாதத்தை இந்தியா தர இயலாது எனவும் எனினும் அதை தாங்கள் பரிசீலிப்பதாகவும் இந்திய அமைச்சர்கள் தம்மிடம் கூறியதாகவும் செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார் என்றும், இந்தியப் பிரதமரையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து பேசுவார்கள் என்றும் அச்செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.